யோகா நிபுணர் பரத் தாசுவரை காதலித்துக் கரம் பிடித்த பூமிகா உண்மையிலேயே வித்தியாசமானவர்.
பாருங்கள்... மங்களகரமாக மட்டுமே பெயர் வைக்கும் சினிமா உலகில் பூமிகா தொடங்கியிருக்கும் பட நிறுவனத்தின் பெயர் டவுண் டவுண்.
இவர் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கும் புதிய படமொன்றில், இவர் ஏற்கப்போகும் கதாபாத்திரமும் இப்படி புதுமையானதுதான். அதாவது தான் பெண் என்பதை வெளிப்படுத்தாமல் ஆணாக வேஷம் போடும் கதாபாத்திரம்.
'சில்ட்ரன் ஆஃப் கெவன்', 'ஃபாதர்', 'கலர் ஆஃப் பாரடைஸ்' போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய மஜித் மஜிதியின் 'பாரன்' படத்தைத் தழுவி இப்படத்தை எடுப்பதாகக் கூறுகிறார்கள்.
முறையான தழுவல் என்றால் தாராளமாக வரவேற்கலாம்!