செல்வா இயக்கத்தில் கே.பி.யின் நூற்றுக்கு நூறு படத்தை ரீ- மேக் செய்கிறது கவிதாலயா. இது அவர்களின் முற்றுப்பெறாத நான்காவது தயாரிப்பு.
குசேலனை மலையாலப் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறது. ஸெல்வன் இயக்கத்தில் ஜவீன் நடிக்கும் கிருஷ்ணலீலை பட வேலைகளும் தீவிரமாக நடக்கிறது. அடுத்து பேரரசுவின் படம், அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் திருவண்ணாமலை.
இந்த மூன்றோடு நான்காவதாக நூற்றுக்கு நூறு ரீ- மேக். கே.பி.யின் நான் அவனில்லையை ரீ-மேக் செய்த செல்வா படத்தை இயக்குகிறார். நான் அவனில்லை போலவே இதிலும் 5 ஹீரோயின்கள்.
வித்தியாசம் தெரிவதற்காக முந்தைய படத்தில் நடித்த ஐவரில் யாரையும் புதிய படத்தில் நடிக்கவைக்கப் போவதில்லையாம். நமிதாவையுமா என்று கேட்டால் ஆம் என்ற பதில் அழுத்தமாக வருகிறது.
நமிதா இல்லாத ஐந்து ஹீரோயின் சப்ஜெக்ட்... ரொம்ப ரிஸ்க்காச்சே!