Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்பு படத்தில் ஸ்ரேயா!

Advertiesment
சிம்பு படத்தில் ஸ்ரேயா!
சும்மா நடந்து போனாலே சிம்பு பற்றிய வதந்திகள் காலை இடறும் காலம் ஒன்று இருந்தது. அது மலையேறிவிட்டது. இப்போதெல்லாம் சிம்பு மெளனச் சாமியார். பேசுவதேயில்லை. அதற்காக அப்படியே விடமுடியுமா?

webdunia photoWD
சிலம்பாட்டத்தில் நடித்து வருகிறவர், ஷக்தி சிதம்பரம் இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். பக்கா ஆக்சன் கதையாம். ஜோடியாக நடிக்க சிம்புவின் சாய்ஸ் ஸ்ரேயா.

ஷக்தி சிதம்பரம் ஸ்ரேயாவிடம் பேசிய சம்மதம் வாங்கியிருக்கிறார். நயன்தாராவும், த்ரிஷாவும் ராக்கெட் வேகத்தில் முந்துவதால், சம்பளத்தை குறைத்து பில்டப்பையும் குறைத்துள்ளார் ஸ்ரேயா. அதன் எதிரொலிதான் சிம்பு படத்தில் கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்டது என்கிறார்கள்.

எப்படியோ உண்மையை உணர்ந்துவிட்டார் ஸ்ரேயா. தயாரிப்பாளர்களுக்கு அதுபோதும்!

Share this Story:

Follow Webdunia tamil