தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தரணி. கடைசியாக இயக்கிய பங்காரமும், குருவியும் கில்லி பெயரை சிதறடித்துவிட்டன.
மீண்டும் தன்னை நிரூபிக்க, விக்ரம், விஜய் மாதிரி ஒரு ஹீரோ தரணிக்கு வேண்டும்.
விண்ணுக்கும் மண்ணுக்கும் என்ற வீணாகப் போன படத்தில் நடித்து சேது பெயரை விக்ரம் கெடுத்த நேரம், தில் படம் தந்து தோள் கொடுத்தவர் தரணி.
நண்பனை நாடிப் போனார் தரணி. நண்பனின் நோக்கம் அறிந்தும், கால்ஷீட் இல்லை அப்புறம் பார்க்கலாம் என டாட்டா காட்டி கிளம்பியிருக்கிறார் விக்ரம்.
கையறு நிலையில் தெலுங்கில் காலூன்ற ஆலோசித்து வருகிறாராம் தரணி.
சினிமாவில் நட்பும் மாயை, வெற்றியும் மாயை!