Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழில் மீச மாதவன்!

Advertiesment
தமிழில் மீச மாதவன்!
, புதன், 21 மே 2008 (14:02 IST)
மலையாள நடிகர் தீலிப்பை மம்முட்டி, மோகன் லாலுக்கு இணையாக பேச வைத்த படம் 'மீச மாதவன்'.

லால் ஜோஸ் இயக்கிய இந்தப் படம் வைக்கம் முகமது பஷீரின் கதைகளில் வரும் சுவாரஸ்யமான திருடனைப் போன்றது.

ஊரில் உள்ளவர்களுக்கு தேவைப்படுவதை, அதே ஊரில் உற்ற மற்றவர்களிடமிருந்து திருடிக் கொடுக்கும் மாதவன் எனும் ஊர் திருடன் திலீப். மாதவன் யாரைப் பார்த்து மீசை முறுக்கிறானோ, அன்றிரவு அவர்கள் வீட்டில் மாதவன் கைவரிசை காட்டியிருப்பான். அதனால், மாதவனின் செல்லப் பெயர் மீச மாதவன்.

காவ்யா மாதவன், ஜோதிர்மயி, ஜெகதி ஸ்ரீகுமார், ஒருவில் உண்ணிகிருஷ்ணன் நடித்திருந்த இந்த மலையாள சூப்பர்ஹிட் திரைப்படம் தமிழில் ரீ-மேக் செய்யப்படுகிறது. இதில் திலீப் வேடத்தில் கார்த்தியும், காவ்யா மாதவன் வேடத்தில் நயன்தாராவும் நடிக்கின்றனர்.

ரமணா நடிப்பில் மீசை மாதவன் என்ற பெயரில் ஏற்கனவே ஒரு படம் வெளிவந்துள்ளதால் (இது மலையாள காபுள்ளிவாலாவின் ரீ-மேக்) வேறு நல்ல பெயராக தேடி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil