Publish Date: Tue, 20 May 2008 (19:41 IST)
Updated Date: Tue, 20 May 2008 (19:41 IST)
குத்துப் பாடலுக்கு ஆடிவரும் சுஜாவுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. விஜயகாந்த் படத்தில் வெயிட்டான ரோல் என்றால் அதிர்ஷ்டம்தானே! அதுவும் இளம் ஹீரோ ஒருவருக்கு ஜோடி என்றால்?
விஜயகாந்த் வங்கி அதிகாரியாக நடித்துவரும் எங்கள் ஆசானில் இளம் ஜோடி ஒன்றும் இருக்கிறது. இதில் விக்ராந்த், சுஜா நடிக்கின்றனர். விஜயகாந்துக்கு ஜோடி ஷெரில் பிரிண்டோ.
செந்தூரப்பூவே விஜய், யுவராணி போல, எங்கள் ஆசான் விக்ரந்த், சுஜா ஜோடிக்கும் டூயட் எல்லாம் இருக்கிறது. பொள்ளாச்சியில் முதல் ஷெட்யூலை முடித்திருக்கும் இயக்குனர் கலைமணி, அடுத்து பாடல் காட்சிகளை எடுக்க உள்ளார்.