மெளனம் கலைத்திருக்கிறார் சோனியா காந்தி. இத்தாலியில் பிறந்து, இங்கிலாந்தில் படித்து, இந்தியரான ராஜீவ் காந்தியை காதலித்து மணந்து, இன்று இந்தியாவின் அதிகாரமிக்க பெண்மணியாக திகழும் சோனியா காந்தியின் வாழ்க்கை, திரைப்படத்தை மிஞ்சும் திருப்பங்களும், திடுக்கிடல்களும் நிறைந்தது.
அதனை அப்படியே திரையில் கொண்டுவர அனுமதி கேட்டார் ஜக்மோகன் முந்த்ரா. அதற்கு இதுவரை பதிலளிக்காமல் இருந்த சோனியா காந்தி, மெளனம் கலைந்து சம்மதம் தெரிவித்துள்ளார்.
சோனியா வேடத்தில் நடிக்க ஜக்மோகனின் தேர்வு ஐஸ்வர்யா ராய். சோனியாவுக்கும் இந்த தேர்வு பிடித்திருப்பதாக ஜக்மோகன் கூறுகிறார்.
அரசியல்வாதியின் வாழ்க்கையை படமெடுப்பது, இரும்பு குண்டை இடுப்பில் கட்டி நீச்சலடிப்பது போன்றது. ஜக்மோகன் எப்படி நீந்தி கரை சேர்கிறார் என பார்ப்போம்!