Publish Date: Tue, 20 May 2008 (19:35 IST)
Updated Date: Tue, 20 May 2008 (19:34 IST)
பார்த்திபனின் வித்தியாசமான பேச்சுக்கு கைதட்டுகிறார்கள். அவரின் வித்தியாசமான பரிசுகளை வியந்து பாராட்டுகிறார்கள். ஆனால், அவரின் வித்தியாசமான திரை முயற்சிகள்...?
புதிய பாதைக்குப் பிறகு பெரிய வெற்றி எதுவும் பார்த்திபனுக்கு கிடைக்கவில்லை. அதிகர் எதிர்பார்த்த குடைக்குள் மழையும் குடைசாய, வெளி இயக்குனர்களின் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். ஆனால், எத்தனை நாளைக்கு?
இதோ தனது புதிய வித்தைகளுடன் மீண்டும் பாயத் தயாராகிறார். விஜயகாந்த் கேட்டு கொடுக்காத வித்தகன் பெயரில் அடுத்தப் படத்தை இயக்கி நடிக்கிறார் பார்த்திபன். கமர்ஷியல் படம் என்றாலும் புத்திசாலித்தனம் தெரியும் என்பவர், ரசிகர்களுக்கு வித்தியாசமான படம் நிச்சயம் என்கிறார் உறுதியுடன்.
பார்த்திபனிடம் ரசிகர்கள் அதைத்தானே எதிர்பார்க்கிறார்கள்.