Publish Date: Tue, 20 May 2008 (16:20 IST)
Updated Date: Tue, 20 May 2008 (16:20 IST)
கெளதம் மேனனின் ரசிகர்களுக்கு இது கவலையளிக்கும் செய்தி. அவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வாரணம் ஆயிரம் இப்போதைக்கு வெளிவருவதாக இல்லை.
சூர்யா பல்வேறு வயதுகளில் தோன்றும் பிரமாண்டமான படம் வாரணம் ஆயிரம். சமீரா ரெட்டி, திவ்யா என இரண்டு நாயகிகள். ஹாரிஸ் ஜெயராஜ் இசை.
காக்க காக்க கூட்டணியின் இந்தப் புதிய படத்திற்கு கமல், ரஜினி படம் அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. போர்ஷன் ஏறக்குறைய முடிந்துவிட்டது. அடுத்து கே.வி. ஆனந்தின் அயனில் நடிக்க தயாராகிவிட்டார் சூர்யா.
பாக்கி போர்ஷன் முடிந்தாலும் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் இருப்பதால், படம் வெளிவர இன்னும் மூன்று மாதங்கள் ஆகுமாம். ஆகஸ்ட் 15 ஆம் தேதி படத்தை எதிர்பார்த்தால் போதும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள் தரப்பில்.
கிடைப்பது உறுமீன் என்றால் காத்திருப்பதில் நஷ்டமில்லை.