Publish Date: Tue, 20 May 2008 (14:04 IST)
Updated Date: Tue, 20 May 2008 (14:02 IST)
யுவன் சங்கர் ராஜாவின் இளமை ததும்பும் இசை விரைவில் இந்தி சினிமாவில் ஒலிக்க இருக்கிறது.
யுவனை இந்திக்கு அழைத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட செல்வராகவன், யுவனை பிரிந்தது துரதிர்ஷ்டம். ஆனால், திறமையிருந்தால் வழித்துணைக்கு ஆள் எதற்கு?
விரைவில் சன்னி தியோல் நடிக்கும் படம் ஒன்றிற்கு யுவன் இசையமைப்பார் எனக் கூறுகிறார்கள். அதேநேரம் ஆல்பம் ஒன்றையும் உருவாக்கி வருகிறார் யுவன். பல மொழிகளில் வெளியாக உள்ள இதனை சோனி நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.
இந்த வருட இறுதிக்குள் யுவனின் இந்தி பிரவேசம் இருக்கும் என உறுதி கூறுகிறார்கள். இது ஆருடம் அல்ல, மானுடம் பார்க்கப் போகும் உண்மை!