Publish Date: Mon, 19 May 2008 (19:43 IST)
Updated Date: Mon, 19 May 2008 (19:42 IST)
கார்ப்பரேட் கம்பெனிகள் புது ட்ரெண்டை உருவாக்கி வருகின்றன. இவர்கள் ஹீரோக்கள் பின்னால் அலைவதெல்லாம் இல்லை. திறமையான இயக்குனர்களை தேடிப் பிடித்து கையில் அட்வான்ஸ் கொடுத்து விடுகிறார்கள்.
வெள்ளித்திரை வெற்றிப் படத்தை இயக்கிய விஜியை, தூண்டில் போட்டு பிடித்திருக்கிறது மிர்ச்சி மூவிஸ். மும்பைக்கு விஜியை அழைத்து கதை கேட்ட மிர்ச்சி மூவிஸ், கதையில் கவிழ்ந்ததோடு, உடனே படம் இயக்க ஒப்பந்தமும் போட்டுள்ளது.
மிர்ச்சி மூவிஸ¤க்காக ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை விஜி இயக்கலாம். அதில் ஒன்று இந்திப் படமாகவும் இருக்கலாம் என்கிறார்கள்.
எங்கு சென்றாலும் திறமைக்கு தீபாராதனை உண்டு என்பது இன்னொரு முறை நிரூபணமாகியுள்ளது.