ஈ.எல்.கே. புரொடக்சன் தொடங்கிய பயணிகளின் கவனத்திற்கு சத்தமில்லாமல் கைவிடப்பட்டுள்ளது.
நடிகர் ஜீவனை பயணிகளின் கவனத்திற்கு கதை ரொம்பவே கவர, கதை சொன்ன விஜயகுமாரை ஈ.எல்.கே. புரொடக்சனுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கும் கதையில் முழு திருப்தி.
ஆனால், பட்ஜெட்?
ஜீவனின் மார்க்கெட்டுக்கு கட்டுப்படியாகாத பட்ஜெட். பாதி படம் ரயிலில் நடைபெறுகிறது. ஒரு மாதமாவது ரயிலை வாடகைக்கு பிடிக்க வேண்டும். இதற்கான செலவு ஒருபுறம் என்றால், ஒரு மாதமெல்லாம் ரயிலை படப்பிடிப்புக்குவிட ரயில்வே நிர்வாகம் தயாராக இல்லை.
நடைமுறை சிக்கல்கள் அதிகம் என்பதால் படம் கைவிடப்பட்டுள்ளது. ஆனாலும், இயக்குனர் விஜயகுமார் போன்ற திறமைசாலியை கைவிட ஜீவன் முட்டாளில்லையே.
பட்ஜெட்டுக்கு அடக்கமாக தனக்கொரு கதை செய்ய சொல்லியிருக்கிறார் ஜீவன். பாதை மாறினாலும் விஜயகுமாரின் பயணம் தடைபடவில்லை!