ராகவா லாரன்ஸ் தனது பெயரை ரஜினி லாரன்ஸ் என்று மாற்றிக் கொள்ளலாம். அப்படி மாற்றுவதற்கான எல்லா தகுதியும் லாரன்சுக்கு இருக்கிறது.
லாரன்சின் பாண்டி படத்தில் ஒரு ரீ-மிக்ஸ். வேறு எந்த நடிகரின் பாடலையும் தேர்வு செய்யாமல், ரஜினியின் தர்மதுரையில் இடம்பெற்ற மாசி மாசம் ஆளானப் பொண்ணு பாடலை ரீ-மிக்ஸ் செய்தனர். ஏதோ எதேச்சையாக நடந்தது என்று விட்டுவிடலாம்.
அடுத்து ஷக்தி சிதம்பரம் தயாரித்து இயக்கும் படத்தில் லாரன்ஸ் நடிக்கிறார். படத்தின் பெயர் ராஜாதி ராஜா! இதுவும் ரஜினி படப் பெயர்தான். தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கட்டுப்பாடுபடி, ராஜாதி ராஜாவை தயாரித்த பாவலர் கிரியேஷன்சிடமிருந்து முறைப்படி பெயரைப் பயன்படுத்த அனுமதி வாங்கியுள்ளனர்.
இதையடுத்து ரஜினியின் தம்பிக்கு எந்த ஊரு படத்தின் ரீ-மேக்கில் லாரன்ஸ் நடிக்கிறார். படத்திற்கு அதே பெயரையே வைத்துள்ளனர்.
பாட்டு, பெயர், படத்தின் கதை எல்லாமே ரஜினி. பெயரையும் மாற்றிக் கொண்டால் நல்லாயிருக்குமே லாரன்ஸ்!