Publish Date: Mon, 19 May 2008 (19:37 IST)
Updated Date: Mon, 19 May 2008 (19:37 IST)
விக்ரமணின் ஆஸ்தான பட நிறுவனம், மூன்று நண்பர்களின் நட்பின் அடையாம் என்று லஷ்மி மூவி மேக்கர்ஸூக்கு தனித்தன்மைகள் சில உண்டு. காலம் வரைந்த பாதையில் லஷ்மி மூவி மேக்கர்ஸூக்கு இது கரடு முரடான காலம்.
படத் தயாரிப்பிலிருந்து சிறிது விலகியிருந்தவர்கள் மீண்டும் களத்தில்! பி. வாசுவின் மகன் ஷக்தி ஹீரோ. 'ராமன் தேடிய சீதை'யில் ஐவரில் ஒருவராக நடித்துவரும் ரம்யா நம்பீஸன் ஹீரோயின்.
படத்திமற்கு ஆட்ட நாயகன் என்று பெயர் வைத்தனர். பிறகுதான் அதேபெயரை வேறு யாரோ சேம்பரில் இவர்களுக்கு முன் பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
இப்போது நல்ல புதுப்பெயராக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.