லகே ரஹோ முன்னாபாய் ஸ்டையில் இருக்கிறது சுந்தர் சி-யின் ஆயுதம் செய்வோம். காதலிக்காக காந்தியை பற்றிப் படித்து காந்தியவாதியானார் முன்னாபாய். ஆயுதம் செய்வோமில் சின்ன வித்தியாசம். காந்தி மியூஸியத்தில் பதினைந்து நாள் தங்கியதால் ரவுடியிசத்தை கைவிடுகிறார் சுந்தர் சி.
ஆயுதம் செய்வோமில் சுந்தர் சி, பார்ட் டைம் ரவுடி. இவரது பக்க வாத்தியம் கான்ஸ்டபிளாக வரும் விவேக். ஒரு சந்தர்ப்பத்தில் பதினைந்து நாள் இருவரும் காந்தி மியூஸியத்தில் இருக்க வேண்டி வருகிறது. அப்போது நடக்கும் ஒரு நிகழ்ச்சியால் ரவுடியிஸத்தை கைவிடுகிறார் சுந்தர் சி.
பொதுவாக காந்தி மியூஸியத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதியில்லை. மியூஸியத்தை நல்ல விஷயத்திற்காகத்தான் பயன்படுத்துகிறோம் என இயக்குனர் உதயன் விளக்கிய பிறகு அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.
காந்தியால் ரவுடி திருந்துகிறான். கான்ஸ்டபின் திருந்தினாரா என கேட்க மறந்துவிட்டோம்.