பருத்தி வீரனை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் இரண்டு படங்களைத் தயாரிக்கிறது. ஒன்றில் தம்பி ஹீரோ. இன்னொன்றில் அண்ணன்.
தம்பி கார்த்தி நடிக்கும் படத்தை சுராஜ் இயக்குகிறார். அண்ணன் சூர்யா படத்தை இயக்குவது ஹரி. படத்தின் பெயர் ஏற்கனவே தெரிந்ததுதான், சிங்கம்!
ஸ்டுடியோ கிரீன் சிவகுமாரின் உறவினருடையது என்பது வெளிப்பேச்சு. உண்மையில் இது சிவகுமாரின் குடும்ப நிறுவனம் என்பது உள்வட்டாரப் பேச்சு.
பருத்தி வீரன் சம்பள பஞ்சாயத்துக்கும் சிவகுமார் அண்ட் ஃபேமிலியே பெரிதாக குமுறி சண்டையிட்டனர். இதையெல்லாம் வைத்து ஸ்டுடியோ கிரீன் சிவகுமாரின் சொத்து என அடித்துச் சொல்கிறார்கள்.
உண்மையா சிவகுமார் சார்?