Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மணிரத்னம் தயாரிப்பில் ராக்கோழி!

Advertiesment
மணிரத்னம் தயாரிப்பில் ராக்கோழி!
, சனி, 17 மே 2008 (19:21 IST)
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் அவ்வப்போது வெளி இயக்குனர்களையும் அரவணைக்கும். இந்த முறை அதிர்ஷ்டம் அடித்திருப்பது ஓரம்போ புஷ்கர்-காயத்ரி தம்பதிகளுக்கு.

ஓரம்போ படம் கலெக்சனில் கவிழ்ந்த அதே நேரம் மேக்கிம்ஙகில் மணிரத்னத்தையும் கவிழ்த்திருக்கிறது. (உபயம் ஆங்கிலப் படம் 'நாச்').

மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கும் படத்துக்கு ராக்கோழி என இந்த நட்சத்திர தம்பதி பெயர் வைத்துள்ளனர். சென்னை-28, சரோஜா படங்களின் நாயகன் ஜெய் இதில் ஹீரோ. கதாநாயகி இன்னும் மாட்டவில்லை.

ஓரம்போ மாதிரி ராக்கோழியில் அதிரடி சமாச்சாரங்கள் நிறைய இருக்கிறதாம். தமிழ் ஜனம் தாங்குமா என்பதுதான் சந்தேகம்.

Share this Story:

Follow Webdunia tamil