குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையை நம்மிடமே அவிழ்த்து விடுகிறார் பானு. தாமிரபரணியில் வந்த அதே பானுதான்.
நயன்தாரா போல நாமும் ஒரு ரவுண்ட் வரலாம் என கனா கண்ட பானுவுக்கு விருந்து கிடைக்க வேண்டாம், மருந்துக்குக் கூட ஒரு படம் கிடைக்கக் கூடாது...?
ஆயக் கலைகள் அறுபத்து நான்கையும் காட்டிய பிறகு ஒரேயொரு வாய்ப்பு பெயர்ந்திருக்கிறது. அதுவும் தூண்டில் படத்தில் வில்லனாக நடித்த ஆர்.கே.வுக்கு ஜோடியாக.
அழகர்மலை என்ற அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் இருந்தவரிடம், என்ன இவ்வளவு இடைவெளி என கர்ட்டஸிக்காக கேட்டால், நல்ல சப்ஜெக்ட் நல்ல கேரக்டரில் மட்டும் நடிக்கிறதுனு முடிவு பண்ணிருக்கேன் என எகிறி கடிக்கிறார்.
இவர்களின் செலக்சனுக்கு ஒரு அளவே இல்லையா!