அசப்பில் பருத்தி வீரன் போலிருக்கிறார் அய்யன் வாசன் கார்த்திக். மாமதுரைக்குப் பிறகு வாசன் கார்த்திக் இளையராஜாவின் இசையில் நடிக்கும் படம் அய்யன்.
கேந்திரன் முனியசாமி இயக்கம். படத்தில் வாசன் கார்த்திக்கின் கேரக்டர் பெயரும் முனியசாமியாம்.
சினேகன் எழுதிய சிவகாமி என்ற பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இளையராஜாவின் இசையைக் கேட்க ஒலிப்பதிவு கூடத்தில் பெரும்திரள்.
பாடலைக் கேட்டு அப்படியே கண்கலங்கிவிட்டது என்றார் இயக்குனர். படத்தில் திவ்யாமோகினி என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்துகிறார்கள்.
அய்யன் கதையை கேட்டதும் அபாரம் என தட்டிக் கொடுத்தாராம் இளையராஜா. உற்சாகத்துடனே படத்தை இயக்கி வருகிறார் கேந்திரன் முனியசாமி.