உங்கள் பிபியை எகிற வைக்கும் ஒரு செய்தி. நடிகை நமிதா சல்சா நடனம் கற்கிறாராம்.
கண்டதை எல்லாம் தின்கிறார், ஆனாலும் கனகச்சிதமாக இருக்கிறாரே என நமிதா மீது பலருக்கு சந்தேகக்கண். இதில் திடீரென்று இரண்டு மூன்று கிலோ எடை குறைந்து, இதயத் துடிப்பை அடிக்கடி எகிற வைப்பார்.
இதன் ரகசியம் என்ன என்று புலனாய்வு செய்தததில், இரவு நேர நடனத்திற்கு நமிதா செல்வது தெரியவந்தது.
இப்போது இடையை மட்டும் ஆட்டி எதிரிலிருப்பவர்களை கிறங்கச் செய்யும் சல்சா நடனம் கற்கிறாராம்.
சும்மாவே கவர்ச்சியில் சிலம்பாடுகிறவர், சல்சாவும் கற்றால்...? கடவுளே, உன் கருணையே கருணை!