ஆக்சன் ஹீரோவாக மாறினால் தவிர தமிழ் சினிமாவில் காலம் தள்ள முடியாது என்பதை புரிந்து கொண்டுள்ளார் நரேன்!
மென்மையான காதல் கதைகள், குடும்ப செண்டிமெண்ட்டுகள் நிறைய நரேனை தேடி வருகின்றன. யோசிக்காமல் உடனே கூறி விடுகிறார். நோ!
ஆக்சன் கதை என்றாலும், அஞ்சாதே ரேஞ்சுக்கு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். இல்லையென்றால் அதற்கும் நோ தான்.
இந்த கறார் முடிவால் நரேனின் கால்ஷீட் கஜானா நேற்று வரை காலியாகவே இருந்தது. இன்று நிலைமையில் மாற்றம்.
செல்வராகவனின் அசிஸ்டெண்ட் சிவகுமாரின் பூக்கடை ரவி படத்தில் நடிக்கிறார் நரேன். கதாநாயகி கிடைத்ததும் ஷூட்டிங்கை ஆரம்பிக்கிறார்கள்.
நரேனின் பிடிவாதம் அவருக்கு நல்லதையே பெற்றுத் தரட்டும்.