Publish Date: Fri, 16 May 2008 (19:36 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:27 IST)
சின்னத் திரையில் பிஸியாக இருக்கும் ராதிகா சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் வெள்ளித்திரையில்!
எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கும் பந்தயம் படத்தில் நிதின் சத்யா, மல்லிகா கபூர் ஒரு ஜோடி. இன்னொரு ஜோடி பிரகாஷ்ராஜ், ராதிகா.
சென்ற முறை சத்யராஜுடன் போட்டி போட்டு நடித்தவர் இந்தமுறை நடிப்பில் பிரகாஷ்ராஜுக்கு சவால் விடுகிறார்.
இரண்டு நாள் முன்பு நிதின் சத்யா, மல்லிகா கபூரை வைத்து ஃபோட்டோ செஷனை எடுத்து முடித்தார் எஸ்.ஏ.சி.
மே இறுதியில் படப்பிடிப்புக்கு கிளம்புகிறது பந்தயம் யூனிட்.