Publish Date: Fri, 16 May 2008 (19:23 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (20:27 IST)
பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து படம் தயாரிக்கலாமா என்று தயங்கிக் கொண்டிருக்க, விநியோகஸ்தர் ஒருவர் ஜெட் வேகத்தில் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளார்.
அவர், ஜின்னா கிரியேஷன்ஸ் ஜின்னா! விநியோகஸ்தராக இருந்த ஜின்னா தயாரிக்கும் முதல் படம் சேவல். இயக்குவது ஹரி என்பதால் படத்தின் டபுள் பாஸிடிவ் தயாராகும் முனூ எல்லா ஏரியாவையும் விற்று டபுள் லாபம் பார்க்கலாம்.
அந்த தைரியத்தில் அடுத்தப் படத்துக்காக இயக்குனருக்கு அட்வான்ஸ் கொடுத்து அச்சாரம் போட்டுள்ளார். இவரும் சாதாரண இயக்குனரல்ல. இயக்கிய மூன்று படங்களையும் வெற்றிப் படமாக்கிய பூபதி பாண்டியன்.
படத்தின் ஹீரோ, பூபதி பாண்டியனின் தம்பி அர்ஜுன் பிரபு. நானும் என் சந்தியாவும் என படத்துக்கு அட்டகாசமான பெயர் சூட்டி, பக்காவாக கதை தயார் செய்து காத்திருக்கிறார். ஜின்னா கண்ணசைத்தால் அடுத்த கணம் களத்தில் பாய்ந்து விடுவார் பூபதி பாண்டியன்.