தமிழில் தயாராகிற பாதி படங்கள் தழுவல் படங்களே. சிலர் சொல்லிவிட்டு தழுவுகிறார்கள். சிலர் சொல்லாமல் தழுவுகிறார்கள்.
கே. ராஜேஷ்வரின் இந்திரவிழாவும் அப்படியொரு தழுவல் சர்ச்சையில் மாட்டியுள்ளது. கல்யாணமாகி மனைவியுடன் குடும்பம் நடத்தும் ஸ்ரீகாந்தின் வாழ்வில், முன்னாள் காதலி நமிதா சின்ன புயலாக நுழைகிறார்.
நினைத்ததை அடைய உடம்பையே மூலதனமாக்க தயங்காத மார்டனிஸ்ட் நமிதா. இவரால் உருவாகும் இடையூறும், இலவம் பஞ்சாக இல்லறம் பறப்பதும்தான் இந்திரவிழா கதை.
ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ், புரூஸ் வில்லிஸின் முன்னாள் மனைவி டெமி மூருடன் நடித்த டிஸ்குளோஷர் (Disclosure) படத்தையே ராஜேஷ்வர் சின்னச் சின்ன மாற்றங்களுடன் எடுத்து வருகிறார் என்கின்றனர் இந்திர விழா கதையைக் கேட்ட விமர்சகர்கள்.
தழுவலோ, வறுவலோ... சுவையாக இருந்தால் எதுவும் நல்லதுதான்!