பச்சை நிறமே படத்தில் வடிவேலுவின் அனுமதி பெயாமல் விளம்பரங்களில் அவர் படத்தை பயன்படுத்தியதுடன், வெளிவராத வடிவேலுவின் காமெடி காட்சிகளை வேறு தயாரிப்பாளர்களிடமிருந்து வாங்கி, தங்கள் படத்தில் தனி ட்ராக்காக்கியிருக்கிறது பச்சை நிறமே யூனிட்.
விடுவாரா வடிவேலு? நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம் என சங்கத்துக்கு ஒரு புகார் கொடுத்ததில் பச்சை நிறம் வெளிறிவிட்டது.
வடிவேலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்தில் வைக்க சமாதான வேலைகள் நடந்து வருகின்றன.
வடிவேலு சமரசத்துக்கு உடன்படுவார் என நம்பிக்கையோடு சொன்னார் பச்சை நிறமே தயாரிப்பாளர்களில் ஒருவரும், இயக்குனருமான கார்க்கி.
சமரசத்துக்கு உடன்பட்டு சாமி மலையேற லட்சங்களில் தட்சணை கேட்குமே. கார்க்கிக்கு அது கட்டுப்படியாகுமா?