நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. ஒரே மாதத்தில் அமெரிக்க மாப்பிள்ளையை மணந்து, அமெரிக்காவுக்கே சென்றுடிவப் போகிறார் என கார்த்திகாவைப் பற்றி சில மாதங்கள் முன் செய்தி வெளியானது. கார்த்திகாவின் அண்ணனே இந்த தகவலை சொன்னதால் அனைவரும் நம்பினர்.
ஆனால், நடந்ததோ வேறு. முன்பைவிட இப்போதுதான் வாய்ப்பு வேட்டையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் கார்த்திகா.
வேட்டையின் பயனாக இரண்டு படங்கள் கிடைத்திருக்கிறது. வினயனின் புதிய தமிழ்ப் படமான நாளை நமதேயில் கார்த்திகாதான் கதாநாயகி. இன்னொன்று கருணாஸ் நாயகனாக நடிக்கும் திண்டுக்கல் சாரதி. இதில் கருணாசுக்கு ஜோடி கார்த்திகா.
இது சீனிவாசனின் வடக்கு நோக்கி எந்திரத்தின் ரீ-மேக் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.