மென்மையான உணர்வுகளை மட்டுமே படமாக்குவேன் என்று சொல்லி அதனை இன்று வரை செயல்படுத்தி வரும் இயக்குனர் பாசில் மீண்டும் தமிழில்!
இந்த முறை அவர் நடிகர் ஸ்ரீகாந்துடன் கைகோர்ப்பார் என தெரிகிறது. படத்தைப் பற்றிய அறிவிப்பு வரும் முன், படம் குறித்து ஒரு பரபரப்பு செய்தி.
ப்ரியம் நாயகி மந்த்ராவை நினைவிருக்கிறதா? உதவி இயக்குனரை காதலித்து திருமணம் செய்த மந்த்ரா இப்போது குண்டாக குடும்பப் பெண்ணாகியிருக்கிறார். மீண்டும் சினிமாவில் நடிக்க மந்த்ராவுக்கு ஆர்வம். அண்ணி, அம்மா வேஷம் என்றாலும் கவலையில்லை.
பாசில் இயக்கும் படத்தில் ஸ்ரீகாந்துக்கு அம்மாவாக மந்த்ரா நடிக்கிறார் என பலமான பேச்சு. ஸ்ரீகாந்த் வயசுதான் மந்த்ராவுக்கு இருக்கும். சினிமாவில் ஸ்லிப்பானால், நடிகைகளின் நிலைமை அதலபாதாளம்தான் என்பதற்கு இது சின்ன சாம்ப்பிள்!