Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலங்கடிக்கும் கார்ப்பரேட்கள்!

Advertiesment
கலங்கடிக்கும் கார்ப்பரேட்கள்!
, வியாழன், 15 மே 2008 (19:11 IST)
ஒரு படம் தயாரிப்பதற்குள் நம்மவர்கள் ஓய்ந்துபோய் விடுகிறார்கள். தமிழகத்தில் கால் பதித்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களோ ஒரே நேரத்தில் நான்கு, ஐந்து படங்களை தயாரிக்கின்றன.

யு டி.வி. நிறுவனம் செல்வராகவனை மூன்று படங்களுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. அதே நேரத் கெளதம் இயக்கத்தில் தெலுங்குப் படம் ஒன்றையும் தயாரிக்கிறது.

பிரமிட் சாய்மீரா, ஐங்கரன் ஃபிலிம்ம்ஸ இண்டர்நேஷனல்ஸ் குறித்து சொல்லத் தேவையில்லை. தமிழ் இண்டஸ்ட்ரியில் நடக்கும் வேலைகளில் முக்கால்வாசி இவர்களுடையதுதான்.

ஹாலிவுட்டின் வார்னர் பிரதர்ஸ் செளந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவுடன் இணைந்து பத்து படங்களைத் தயாரிக்க உள்ளது. அனில் அம்பானியின் அட்லாப்ஸ், மாதவனுடன் நான்கு படங்களுக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.

திறமையான நடிகர்கள், இயக்குனர்களைத் தேடிப்போய் நான்கு ஐந்து படங்கள் என மொத்தமாக ஒப்பந்தம் போடுகிறார்கள். இதனால் சின்ன தயாரிப்பாளர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil