குசேலனில் ரஜினிக்கு இரண்டு பாடல்களாம். ஒன்று நயன்தாராவுடன். டூயட் என்பது சொல்லாமலே தெரிந்திருக்கும்.
குறுகிய கால தயாரிப்பு என்பதால் வெளிநாடு எல்லாம் செல்ல நேரமில்லை. அதனாலென்ன? வெளிநாட்டை ஸ்டுடியோவிலேயே உருவாக்கியிருக்கிறார்கள்.
எகிப்து பிரமிடுகள் போன்று ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அரங்கம் அமைத்து அந்தப் பாடலை படமாக்கினார் பி. வாசு. தனது பிரமிட் ஐடியாவை அவர் ரஜினியிடம் தெரிவிக்க, பேஷ் ரொம்ப நல்லாருக்கு என உடனே ஒத்துக் கொண்டாராம்.
முழுப் பாடலையும் அந்த அரங்கிலேயே எடுத்திருக்கிறார்கள் படத்தின் ஹைலைட்களில் இதுவும் ஒன்று என்பதை சொல்லவும் வேண்டுமா!