Publish Date: Wed, 14 May 2008 (19:20 IST)
Updated Date: Wed, 14 May 2008 (19:20 IST)
குஷ்பு ரசிகர்களுக்கு குதூகலமான ஒரு செய்தி. கணவர் சுந்தர் சி நடிக்கும் படத்தில் தோன்றுகிறார் குஷ்பு!
'கிரி', 'ரெண்டு' படங்களைத் தயாரித்த குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் அடுத்து 'ஐந்தாம் படை' என்ற படத்தை தயாரிக்கிறது. குஷ்புவின் கணவர் சுந்தர் சி-தான் ஹீரோ.
இவரது அசிஸ்டெண்டும் 'வீராப்பு' படத்தின் இயக்குனருமான பத்ரிதான் இயக்கம். கணவருடன் டூயட் பாட குண்பு கண்டுபிடித்திருக்கும் நடிகை அதிதி செளத்ரி. பெயரைக் கேட்டே அதிதியின் பூர்வீகத்தை அறிந்துகொள்ளலாம்.
வடிவேலு இன்னும் சுந்தர் சி-யுடன் சமரசம் ஆகாததால் காமெடி போர்ஷனை விவேக் கவனித்துக் கொள்கிறார். நாசருடன் மலையாள நடிகர் முகேஷும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஐந்தாம் படையில் ஒரு சர்ப்ரைஸ் ரோலில் தோன்ற முடிவு செய்துள்ளாராம் குஷ்பு. பாலசந்தரின் 'ஜாதிமல்லி'யில் முகேஷ், குஷ்பு இணைந்து நடித்துள்ளனர்.
ஐந்தாம் படைக்கு இசை டி. இமான். நாளை இதன் தொடக்க விழா நடைபெறுகிறது.