Publish Date: Tue, 13 May 2008 (19:51 IST)
Updated Date: Tue, 13 May 2008 (19:50 IST)
காரணம் இல்லாமல் எல்லாம் பெயர் வைப்பதில்லை என்கிறார் இயக்குநர் சுந்தர் சி. இடம் 'தீ' பட சூட்டிங் ஸ்பாட். 'தீ' பெயருக்கு என்ன காரணமாம்?
'தீ' யில் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக வருகிறாராம் சுந்தர் சி. இவரது நேர்மை அரசியல்வாதிகளுக்கு இடைஞ்சலாக அமைய ஆளாளிற்குப் பந்தாடுகிறார்கள். காக்கி போட்டால்தானே பந்தாடுவீர்கள், நானும் கதருக்கு மாறுகிறேன்டா என்று சுந்தர் சியும் அரசியல்வாதி ஆகிறார்.
படத்தில் இவரது பெயர் சாரதி. எதிரிகளைச் சும்மா தீ மாதிரிச் சுட்டெரிப்பதால் சாரதீ! அந்தத் தீ தான் படத்தின் பெயர்.
தெலுங்கில் ஆபரேசன் துரியோதனா என்ற பெயரில் வெளிவந்து வெற்றிபெற்ற படத்தைத்தான் 'தீ' ஆக ரீ-மேக் செய்கிறார்கள். ஆக்ஷன் காட்சிகளில் பொறி பறந்தாலும், அதற்கு ஈடு செய்யும் வகையில் ஜில்லென்று இருக்குமாம் காதல் காட்சிகள்.
தித்திக்கும் தீ!