மோசடிகள் பலவிதம். அதில் இது ஒரு விதம். பச்சை நிறமே என்ற புதிய படத்தின் விளம்பரத்தைப் பார்த்த வடிவேலுவிற்கு தூக்கிவாரிப் போட்டிருக்கிறது. கால்ஷீட் கேட்காமல், அட்வான்ஸ் தராமல், ஷூட்டிங் நடத்தாமல், வடிவேலுவின் படத்தைப் போட்டு விளம்பரம் செய்திருக்கிறார்கள்.
நெருங்கி விசாரித்ததில் நொறுங்கிப் போகும் அளவிற்கு விடயங்கள். வடிவேலு நடித்த பிற படங்களின் தயாரிப்பாளர்களிடம் இருந்து புட்டேஜ் கருதி வெட்டியெறியப்பட்ட வடிவேலுவின் காமெடிப் பகுதிகளை கோர்த்து எடுத்து பச்சை நிறமே படத்தில் சேர்த்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர்.
குடிக்கிற கஞ்சியில் இப்படியெல்லாமா குளறுபடி பண்ணுவார்கள் என்று அலறியடித்து நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்தார் வடிவேலு. அதன் நகல் ஒன்று தயாரிப்பாளர் சங்கத்திற்கும் அனுப்பப்பட்டு உள்ளது.
ஃபிலிம் கேப்பில் புல்டோசர் நுழைப்பவர்களும் ஃபீல்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.