சினிமாவில் வாரிசுகளுக்குத் தடை கொண்டு வரலாமா? கொஞ்ச நாள் போனால் இந்தக் கேள்வி இன்னும் விஸ்வரூபம் எடுக்கும். அந்தளவிற்கு எங்கெங்கு நோக்கினும் வாரிசுகள்.
சினிமாவில் ஆண் வாரிசுகளே அதிகம். அந்தக் குறையைப் போக்குவதற்காக வந்திருக்கும் பெண் வாரிசு மேக்னா! கவிதாலயா தயாரிப்பில் செல்வன் இயக்கத்தில் ஜீவன் ஜோடியாக 'கிருஷ்ண லீலை'யில் நடிக்க மேக்னா ஒப்பந்தமாகியுள்ளார்.
மேக்னாவின் உடல் முழுக்கக் கலை ரத்தம்தான். அப்பா, மகேந்திரனின் உதிரிப் பூக்கள் படம் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் சுந்தர், அம்மா, வைதேகி காத்திருந்தால் புகழ் பிரமிளா.
பெற்றோர்கள் விட்டதைப் பிடிக்க மகள் வந்துள்ளார். வாழ்த்துவோம், வளரட்டும்!