Publish Date: Tue, 13 May 2008 (18:43 IST)
Updated Date: Tue, 13 May 2008 (18:43 IST)
அதிரடி மன்னன் ஜாக்கிசான், ஆக்சன் கிங் ஜெட் லீயுடன் இணைந்து நடித்த படம் தி பார்பிடன் கிங்டம். வெளிநாடுகளில் வெற்றிவாகை சூடிய இப்படம் இந்தியா வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த ஜே.எஸ்.கே. ஃபிலிம் கார்ப்பரேஷன் தி பார்பிடன் கிங்டமின் தமிழ் மற்றும் ஆங்கில விநியோக உரிமையை வாங்கியுள்ளது. அடுத்த மாதம் இரு மொழிகளிலும் படத்தை நம்மூர் திரையரங்கில் பார்க்கலாம்.
வழக்கமான நல்லவன் கெட்டவன் கதைதான் தி பார்பிடன் கிங்டம். ஜாக்கிசான் படங்களில் யார் கதையை பார்க்கிறார்கள். அதிலும் உடன் ஜெட் லீயும் இருந்தால்...
சும்மா வந்து நின்றால் போதாதா, படத்தை ஓட்டு ஓட்டென்று ஓட்டிவிட மாட்டார்களா ரசிகர்கள்!