போகிற இடமெல்லாம் பாராட்டையும் பெரும் கூட்டத்தையும் சேர்த்து வருகிறார் WWE வீரரான கிரேட் காளி. ஏழரையடி இருக்கும் இந்த பிரமாண்ட மணிதரை இந்தியாவே ரசிக்கிறது. இது போதாதா நம்மவர்களுக்கு.
பொது மேடையில் குஸ்தி போட்டுக் கொண்டிருந்தவரை சினிமாவில் சண்டைபோட ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள்.
ராமா - தி சேவியர் என்ற படம் இந்தியில் தயாராகிறது. இதில் கிரேட் காளியை வில்லனாக நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. கதையேக் கேட்ட காளியும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
இதற்குமுன் The Longest Yard என்ற ஆங்கிலப் படத்தில் நடித்துள்ளார் காளி. மேக்கப் போட்டாலும், குஸ்திதான் தனது லட்சியம் என்று கூறுகிறார் கிரேட் காளியாக கொண்டாடப்படும் தலிப் சிங் ராணா.