Entertainment Film Featuresorarticles 0805 13 1080513030_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரம்யாவாகும் ராகிணி!

Advertiesment
ரம்யா ராகிணி சண்ட
, செவ்வாய், 13 மே 2008 (14:04 IST)
நடிகைகள் எப்போது பெயரை மாற்றுவார்கள் என்று சொல்ல முடியாது. முதல் நாள் வரை ரம்யாவாக இருப்பவர்கள் மறுநாள் படுக்கையை விட்டு எழும்போது திவ்யாவாக பெயர் மாறியிருப்பார்கள்.

சண்ட-யில் நதியாவின் மகளாக வந்து சுந்தர் சி-யை காதலித்தவர் ராகிணி. சமீபகாலத்தின் சொதப்பல் நாயகி என்ற பெயரும் சண்ட மூலம் ராகிணியை வந்து சேர்ந்தது.

சுந்தர் சி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் தீயிலும் ராகிணிதான் நாயகி. படம் குறித்த செய்திகளில் நாயகியின் பெயர் ரம்யா என்றிருந்தால் குழம்ப வேண்டாம்.

ராகிணி தனது பெயரை ரம்யாவாக மாற்ற உள்ளார். ரம்யா அவரது ஒரிஜினல் பெயராம். குத்து ரம்யா தனது பெயரை திவ்யாவாக மாற்றியதால், தனது சொந்தப் பெயரான ரம்யாவுக்கு மாறுவதாகக் கூறினார் ராகிணி அலைஸ் ரம்யா.

ராசிக்காகவே இந்த பெயர் மாற்றம் என்கிறார்கள் சிலர்.

Share this Story:

Follow Webdunia tamil