செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவனில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென்னுடன் பார்த்திபனும் நடிக்கிறார்.
நாயகனாக நடித்து வந்தவர் எப்படி இதற்கு சம்மதித்தார் என்று தோன்றும். காரணம் சிம்பிள். பார்த்திபனின் சினிமா கேரியரில் இப்படியொரு கேரக்டர் கிடைத்ததில்லையாம்.
இந்த வித்தியாச விரும்பி நடிகரை வியப்பிலாழ்த்திய அந்த கேரக்டர் ஹைதராபாத்தில் தயாராகிக் கொண்டிருக்கிறது. பார்த்திபனை வைத்து ஷூட் செய்யும் முன், மேக்கப் டெஸ்ட் ஒன்றை நடத்தினாராம் செல்வராகவன்.
பொதுவாக புதுமுகங்களுக்கு தான் மேக்கப் டெஸ்ட் எடுப்பார்கள் என்பதால் இதனை ரகசியமாக வைத்துள்ளார்கள். ஆயிரத்தில் ஒருவனில் பாகவதர் முடியுடன் தோன்றுகிறாராம் பார்த்தி.
படத்தில் எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற அதே அந்தப் பறவை போல பாடல் இடம்பெறுகிறதாம். ரீ-மிக்ஸாக இல்லாமல் அப்படியே பயன்படுத்துகிறார்களாம்.