தற்கொலைக்கு முயன்ற தயாரிப்பாளர் காஜா மைதீன் மீண்டும் படம் தயாரிக்கிறார்.
ரோஜா கம்பைன்ஸ் மூலம் அஜித், விஜயகாந்த் போன்ற பெரிய நடிகர்களை வைத்து படம் தயாரித்த காஜா மைதீன் ஒரு சந்தர்ப்பத்தில் ஃபைனான்ஸ் சிக்கலில் மாட்டி நொடிந்துப் போனார். அந்த நேரம் கமலை வைத்து வேட்டையாடு விளையாடு படத்தையும் தொடங்கினார்.
கடன் கழுத்தை நெரிக்க தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றார் காஜா. நல்ல வேளையாக அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.
தயாரிப்பிலிருந்து தற்காலிகமாக விலகி ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்து வந்த காஜா மைதீன் தற்போது கடன் பிரச்சனைகளிலிருந்து மீண்டுவிட்டார். மீண்டும் படம் தயாரிக்கும் அளவுக்கு அவருக்கு தெம்பு வந்திருக்கிறது. புதுப்படத்தில் காஜாவின் கதாநாயகன் சுந்தர் சி.
தீ, பெருமாள், ஆயுதம் செய்வோம் படங்களுக்குப் பிறகு குஷ்பு தயாரிக்கும் ஐந்தாம்படை என பிஸியாக இருக்கும் சுந்தர் சி, இந்த நான்கு படங்களும் முடிந்த பிறகு காஜா மைதீனின் தயாரிப்பில் நடிக்கிறார்.