Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நமீதா - வெப்பத்தை தணித்த சிற்பம்!

Advertiesment
நமீதா - வெப்பத்தை தணித்த சிற்பம்!
, திங்கள், 12 மே 2008 (18:02 IST)
நடிகைகளுக்கு ஆதரவற்ற குழந்தைகள் மீது அப்படியென்ன பாசமோ. லட்சுமிராயைத் தொடர்ந்து தனது பிறந்தநாளையும் 50 ஆதரவற்ற குழந்தைகளுடன் கொண்டாடினார் நமீதா. இடம், தீவுத் திடல் ஸ்னோ பால் அரங்கம்.

webdunia photoWD
அனைவரும் வியர்த்து வழிய நின்றபோது, மதியம் 2.30 மணிக்கு கோடை மழையாக வந்தார் நமி. கறுப்பு உடையில் முக்கால்வாசி சந்தன தேகம் தரிசனம் தர, ஆளுயர கேக்கை வெட்டினார். பாய்ந்து சென்று ஃபோட்டோ எடுத்தவர்களுக்கு, தன் கையாலேயே நமீதா கேட் ஊட்ட, சொக்கிப் போனது மொத்த கூட்டமும்.

ஒருகட்டத்தில் பிறந்தநாள் மேடை சரிய, கீழே விழுந்த ஃபோட்டோ கிரஃபர்கள் லோ ஆங்கிளில் நமியை சுட்டுத் தள்ளினர்.

பிறகு ஸ்னோ பால் பனி மழை பொழியும் இடம் சென்றார் நமி. அவரை ஒட்டி உறவாட ஒவ்வொரு ரசிகனும் துடியாய் துடிக்க, உஷார் நமி உடனே எஸ்கேப்.

தீவுத் திடலின் வெப்பத்தை கொஞ்ச நேரம் நமீதா தணித்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil