உண்மையிலேயே முரளிக்கு இது மறு அவதாரம்தான். எங்கே ஆளைக் காணோம் என்று தேடிக் கொண்டிருந்தவரை, ஒகேனக்கல் உண்ணாவிரத மேடையில்தான் பார்க்க முடிந்தது.
நீண்ட நெடும் நாளைக்குப் பிறகு எங்க ராசி நல்லராசி படத்தில் நடிக்க முரளிக்கு வாய்ப்பு கிடைத்தது. பெயர் ராசியோ என்னவோ, உடனே அடுத்த வாய்ப்பு.
கே.பாலசந்தர் (இது வேறு பாலசந்தர்) இயக்கும் மறு அவதாரம் படத்தில் அப்பா மகன் இரு வேடங்கள் முரளிக்கு. விசாலினி என்ற புதுமுகம் ஜோடி. அப்பா மகன் பாசத்தைப் பற்றிய கதையா என்றால், இல்லையாம். அண்ணன் தங்கை பாசமாம். முரளியின் தங்கையாக அக் ஷயா நடிக்கிறார்.
எந்த பாசமாக இருந்தாலும் படம் பாஸாக வேண்டும், அதுதான் அவதாரத்திற்கு அழகு!