Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கருத்தை கவர்ந்த சுப்ரமணியபுரம் பாடல்!

Advertiesment
கருத்தை கவர்ந்த சுப்ரமணியபுரம் பாடல்!
, சனி, 10 மே 2008 (17:05 IST)
webdunia photoWD
சத்யம் சினிமாவில் சுப்ரமணியபுரம் பாடல் வெளியீட்டு விழா. பாடலை வெளியிட்டவர்கள் அமீர், கரு. பழனியப்பன், சிம்புதேவன், வெற்றிமாறன் மற்றும் ராம. நாராயணன். சுப்ரமணியபுரத்தின் இயக்குநர் சசிகுமார் உதவி இயக்குனராக பணிபுரிந்தது அமீர், பாலாவிடம்!

இதனை வைத்தே சுப்ரமணியபுரத்தின் தரத்தை யூகித்து விடலாம். நேற்று இரண்டு பாடல்களை பார்க்கவே முடிந்தது.

எண்பதுகளின் மதுரையை அப்படியே யதார்த்தமாக காட்சிப்படுத்தியிருந்தார்கள். ஜேம்ஸ் வசந்தன் இசைக்கு பாடல்கள் எழுதியவர்கள் தாமரை, யுகபாரதி.

ஜெய், சுவாதி, கஞ்சா கருப்பு, சமுத்திரக்கனி நடித்திருக்கும் இப்படத்தில் இயக்குனர் சசிகுமாரும் ஒரு வேடமேற்றுள்ளார். மேலை நாட்டு திரைப்பட பாணியில் படத்தின் விளம்பரத்துக்காக ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர்.

விழா முடிந்து வெளியேறிய பின்னும், வாழ்த்திப் பேசியவர்களின் வார்த்தைகளை மீறி காதில் ரீங்கரித்துக் கொண்டிருந்தது தாமரையின் கண்க‌ள் ரெண்டால் என்னை கட்டி இழுத்தாய் பாடல்.

Share this Story:

Follow Webdunia tamil