கலைஞர் கருணாநிதியின் குடும்பத்திற்கும் கலைக்கும் இடைவெளியே இல்லை என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் கலைஞரின் பேரனான அறிவுநிதி.
அறிவுநிதி கலைஞரின் மகன் மு.க. முத்துவின் மகன். எழுபதுகளில் தமிழ்த் திரையில் கதாநாயகனாக உலா வந்த மு.க. முத்து, சமீபத்தில் தேவா இசையில் மாட்டுத்தாவணி படத்துக்காகப் பாடினார்.
தந்தை எட்டடி பாயும்போது மகன் பத்தடியாவது பாய்வதுதானே மரியாதை!
மு.க. முத்துவின் மகன் அறிவுநிதி ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சுந்தர் சி.யின் பெருமாள் படத்துக்காக ஒரு பாடலைப் பாடினார். சென்ற வாரம் பாடல் பதிவு நடந்தது.
வாய்ப்பு வந்தால் தொடர்ந்து பாடும் முடிவில் இருக்கிறாராம் கலைஞரின் பேரன்.