தனுஷுடன் முதல் படம். பிறகு சிம்புவுடன், விக்ரமுடன் ஒரு பாடலுக்கும் ஆடினார். ஆளை கண்டுபிடித்து விட்டீர்களா? மன்மதனில் மிரட்டிய சிந்து துலானியைத்தான் சொல்கிறோம்.
தமிழில் படமில்லாத சிந்து துலானி புறவாசல் வழியாக தமிழ்நாட்டில் எண்ட்ரி ஆகிறார்.
தெலுங்கில் சிந்து துலானி, நவ்தீப் நடித்த படமொன்றை திரு. கெளதம் எஸ்.எஸ்.எல்.சி. என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். பி.ஏ. அருண்பிரசாத் இயக்கிய இந்தப் படம் தெலுங்கில் நூறு நாட்களைத் தாண்டி ஓடியதோடு நான்கு நந்தி விருதுகளையும் வென்றிருக்கிறது.
தறுதலையாக திரியும் எஸ்.எஸ்.எல்.சி. நவ்தீப் படித்து ஐ.ஏ.எஸ். ஆவதுதான் கதையாம்.
என்ன கதையாக இருந்தால் என்ன... துலானியின் கவர்ச்சிக்குத்தானே கூட்டம் சேரப் போகிறது.