சித்தார்த்தனாக உலக இன்பங்களில் திளைத்திருக்கும் ஒருவன் திடீரென புத்தனாக விரும்புகிறான். அவன் புத்தனாக மாற இந்த சமூகம் அனுமதித்ததா... இல்லையா?
சிபி நடிக்கும் புதிய படமான சித்தார்த்தாவின் கதைச் சுருக்கம் இது. கதைக்கேற்ற பெயரை தேர்வு செய்தவர் இயக்குனர் ஆர்.சிவாதேவன். சித்தார்த்தா இவருக்கு முதல் படம்.
விஜய் ஆண்டனி இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஃப்ரெண்ட்ஸ் பெஸ்டிவல் பிலிம்ஸ் சார்பில் எஸ்.சுதாகரன் தயாரிப்பு.
அரைடஜன் வில்லன்களுடன் தான் இப்போதெல்லாம் படமே எடுக்கிறார்கள். ஆச்சரியமாக இதில் வில்லன்களே இல்லையாம். சூழ்நிலைகளே நாயகனுக்கு வில்லனாக அமைகின்றன என்றார் இயக்குனர் ஆர்.சிவாதேவன். இவர் பாலசந்தரின் சிஷ்யராம். குருவின் பெயரை காப்பாற்றுவது போல்தான் கதையை தேர்வு செய்திருகிறார்.