சென்ற வாரம் எங்கள் ஆசானின் படப்பிடிப்பு தொடங்கியது. தமிழ் சினிமாவுக்கு பரிட்சமயமான கோபிசெட்டி பாளையம், பொள்ளாச்சி பகுதிகள்தான் லொகேஷன்.
விஜயகாந்த் நடிக்கும் அரசியல் நெடி சற்று தூக்கலாக இருக்கும் எங்கள் ஆசானில் ஷெரில் பிரிண்டோ நாயகி. அரசாங்கத்தைத் தொடர்ந்து இதிலும் விஜயகாந்தை காதலிக்கும் பாக்கியம் இந்த மும்பை அழகிக்கு கிடைத்திருக்கிறது.
எங்கள் ஆசானில் விஜயகாந்துடன் விக்ராந்தும் நடிப்பதாக தகவல். விக்ராந்தின் அண்ணன் விஜய்யின் மார்க்கெட் நமத்து கிடந்த போது, விஜயகாந்துடன் இணைந்து நடித்த சொந்தூரப்பாண்டிதான் அதனை உலர்த்தி எடுத்தது. விக்ராந்தும் ஏறக்குறைய அதே நிலையில்தான் இருக்கிறார்.
எங்கள் ஆசான் அவரை கரை சேர்த்தால்தான் உண்டு!