அந்தோணி- யார்? ஷாம், மல்லிகா கபூர் நடிக்கும் படம். கடலும் சார்ந்த வாழ்வும்தான் படத்தின் கதை.
கதைக்கும் குத்துப் பாடலுக்கும் எந்த காலத்தில் தொடர்பு இருந்திருக்கிறது. ஏவி.எம். பக்கம் போனபோது துணை நடிகைகளுக்கு மத்தியில் மல்லிகா கபூரின் இடையை பிடித்தபடி ஆடிக் கொண்டிருந்தார் ஷாம். பின்னணியில் பாடல்.
மல்லாக் கொட்டை கண்ணு
மாட்டிக்கிட்டா பொண்ணு
கவித்துவம் வழிந்த பாடலுக்கு நடனம் அமைத்துக் கொண்டிருந்தார் தினா. அருகில், இயக்குனர் பாண்டி.
ஷாம் அதிகம் நம்பிக் கொண்டிருக்கும் படம் இது. தனது இரண்டாவது இன்னிங்ஸ்சுக்கும் இதைதான் நம்பிக் கொண்டிருக்கிறார் மல்லிகா கபூர்.