Publish Date: Fri, 09 May 2008 (13:49 IST)
Updated Date: Fri, 09 May 2008 (13:48 IST)
எஸ்.ஜே. சூர்யா என்றாலே எகிறி ஓடுகிறார்கள் நடிகைகள். அவர் நடிக்கும் படத்திற்கு மட்டுமல்ல. அவர் இயக்கும் படத்திற்கும் இதே நிலைதான்.
தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து இயக்கும் புலியில் இந்தி புள்ளிமான் ஒருவரை நடிக்க வைக்க விரும்பியிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா. துரதிர்ஷடவசமாக எந்த மானும் புலிக்கு அகப்படவில்லை.
இந்நிலையில் எஸ்.ஜே. சூர்யாவின் இந்தி குஷியில் நடித்த கரீனா கபூர் புலியில் நடிக்கிறார் என புரளி. இந்த தெலுங்கு புலளி கரினாவின் காதில் தேள் கொட்டியது போல் விழுந்திருக்கிறது. உடனே புலி புரளிக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
பாலிவுட் படங்களே வேண்டிய அளவு இருக்கும் போது தெலுங்கு மொழியில் நடிக்கும் எண்ணமெல்லாம் அறவே இல்லையென கூறியுள்ளார் கரீனா.
ஆக, எஸ்.ஜே. சூர்யாவின் நாயகி வேட்டை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.