சத்யம் திரையரங்கில் கூடியிருந்தவர்களுக்கு சந்தோஷ செய்தி ஒன்றை கூறினார் ஜெயம் ரவி.
இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை விரைவில் இயக்க உள்ளாராம் ஜெயம் ரவி. இதில் தன்னுடன் நடிக்க ஜீவாவை கேட்டிருக்கிறார். அவரும் ஈகோ எதுவும் பார்க்காமல் கதையை கேட்டு உடனே ஓ.கே. சொல்லியிருக்கிறார்.
சென்னை சத்யம் காம்ப்ளக்ஸில் நடைபெற்ற 'தெனாவட்டு' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இந்தத் தகவலை வெளியிட்டார் ஜெயம் ரவி. பிறகு பேசிய ஜீவா இதனை ஆமோதித்ததுடன் தெனாவட்டு படப்பிடிப்பில் நடந்த தீ விபத்தை ஹாஸ்யத்துடன் சொல்ல முயன்றார். (காமெடி இன்னும் ஜீவாவுக்கு முழுதாக கைவரவில்லை)
ராம. நாராயணன் ஆடியோவை வெளியிட ஜெயம் ரவி, ரமேஷ், ஜீவன், சீமான், சுப்ரமணியம் சிவா, நா. முத்துக்குமார் என அரை டஜன் பேர் ஆடியோவை பெற்றுக்கொண்டனர்.
விழா நிகழ்ச்சிகளை தூய தமிழில் தொகுத்தளித்தார் கவிஞர் கருணாநிதி. (கலைஞர் அல்ல). பேசிய அனைவரும் கவிஞரின் தமிழையும் மறக்காமல் புகழ்ந்தனர்.