Publish Date: Thu, 08 May 2008 (21:00 IST)
Updated Date: Thu, 08 May 2008 (21:00 IST)
சென்னையில் உள்ள ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டபம் சென்றால் உச்சி வெயிலிலும் ஊட்டி குளிருடன் வெளியே வரலாம். தினமும் வருகிறவர்களுக்கு எல்லாம் குளிர்ந்த மோர் தந்த வெயிலின் உக்கிரத்தைக் குறைக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
ஒவ்வொரு கோடையிலும் மோர் வினியோகிக்க ரஜினியிடம் இருந்து உத்தரவு வந்துவிடுமாம். அதனை இன்றுவரை சிறப்பாகச் செயல்படுத்தி வருவதாகக் கூறினார் ரசிகர் ஒருவர்.
இந்த முறை தனது திருமண மண்டபம் மட்டுமன்றி சென்னை நகரம் முழுக்க மோர்ப்பந்தல் அமைக்க உத்தரவிட்டுள்ளாராம் ரஜினி. முறைப்படி ரசிகர் மன்றங்களுக்குச் சேதி போனதும் மோர்ப்பந்தல்கள் அமைக்கப்படுமாம்.
ரஜினி வழியை மற்ற நடிகர்களும் தாராளமாகப் பின்பற்றலாம்.