இந்தி இயக்குனர் அனீஸ் பாஸ்மியின் படத்தில் நடிக்கிறார் ஜெனிலியா. ஒரு வகையில் இதுவொரு சாதனை!
டி. பாஸ்கரின் 'பொம்மரிலு' படத்தில் சித்தார்த்துடன் நடித்தார் ஜெனிலியா. பிறகு அந்தப் படம் சந்தோஷ் சுப்ரமணியம் என்ற பெயரில் தமிழில் ரீ-மேக்கானது. இதிலும் ஜெனிலியாதான் ஹீரோயின்.
நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இதே கதையை இந்தியில் தயாரிக்கிறார். இயக்கம் அனீஸ் பாஸ்மி. சித்தார்த், ஜெயம் ரவி நடித்த வேடத்தில் ஹர்மன் பவேஜா நடிக்கிறார். ஜெனிலியா நடித்த வேடத்தில் இந்தியிலும் அவரையே நடிக்க கேட்டுள்ளனர்.
ஒரே கதையில் மூன்று மொழிகளில் நடித்த பெருமை இப்போதுள்ள எந்த முன்னணி நடிகைகளுக்கும் இல்லை. அந்தப் பெருமையை தட்டிச் செல்கிறார் ஜெனிலியா.
இந்தியில் பிரகாஷ்ராஜின் வேடத்தில் நானா படேகர் நடிக்கலாம் என்கிறார்கள்.